ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 14 ஜூன் 2023 (07:59 IST)

ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டால், அடுத்தது என்ன நடைமுறை?

TN assembly
மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு திடீரென கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஒரு மாநில அமைச்சர் கைது செய்யப்பட்டால் அடுத்து என்ன நடைமுறை என்பது குறித்து தகவல் தற்போது தெரியவந்துள்ளது. 
 
பொதுவாக ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டால் அந்த தகவல் அமலாக்க துறை மூலமாக சட்டப்பேரவை செயலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு தெரியப்படுத்தும் போது சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்
 
தமிழக சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தால் சபாநாயகர் உடனடியாக அந்த தகவலை மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதிவு செய்வார். ஆனால் தற்போது சட்டமன்ற பேரவை நடைபெறவில்லை என்பதால் ஐந்து நாட்கள் காத்திருந்து கைது நடவடிக்கைகள் தொடர்ந்தால் அவரது கைது குறித்த தகவலை  மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் தெரியப்படுத்துவார்.
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட தகவல் சட்டப்பேரவை செயலாளருக்கு அமலாக்கத்துறை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இனிமேல் இந்த தகவல் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சபாநாயகர் ஆலோசிப்பார் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva