1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ED officers arrest minister senthil balaji

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது.. முதலமைச்சர் அவசர ஆலோசனை..!

senthil balaji
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று இரவு அதிரடியாக அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதை அடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவசர ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நேற்று காலை நடந்த சோதனையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை அடுத்து அமைச்சர்கள் சட்ட வல்லுநர்களுடன் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவசர ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் ரத்த அழுத்தம் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி.. !