1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 14 ஜூன் 2023 (07:47 IST)

செந்தில் பாலாஜி மயக்க நிலையில் உள்ளார்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையில் உள்ளார் என்று அவரை நேரில் பார்த்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 
 
நேற்று நள்ளிரவு திடீரென அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி வந்ததாகவும் இதனை அடுத்து அவர் சென்னை பன்னோப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் குறித்து விசாரிக்க உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, மாசுப்பிரமணியன், உள்ளிட்டோர் மருத்துவமனையில் நேரில் சென்று மருத்துவரிடம் ஆலோசித்தனர். 
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையில் உள்ளார் என்றும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 
 
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும் நான்கு ஐந்து முறை பெயர் சொல்லி அழைத்தபோதும் அவர் கண் திறக்கவில்லை என்றும் அமைச்சர் சேகர் பாபு செய்தி அவர்களிடம் கூறினார்.
 
Edited by Siva