1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 14 ஜூன் 2023 (07:32 IST)

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி.. !

Senthil Balaji
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட உள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர் என்பதும் அவர் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடந்தது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் திடீரென அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து கேட்டறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா சுப்பிரமணியன், அமைச்சர் ஏவ வேலு, உள்ளிட்டோர் மருத்துவமனையில் வருகை தந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva