1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (15:16 IST)

தீ விபத்தான ராஜீவ்காந்தி மருத்துவமனை கட்டிடம் இடிப்பு! – அமைச்சர் அறிவிப்பு!

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று:
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அந்த கட்டிடம் இடிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தரைதளத்தில் தீப்பிடித்த நிலையில் 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தன. அங்கிருந்த 128 நோயாளிகளை தீயணைப்பு துறையினர் மற்றும் ஊடகவியலாளர்கள் இணைந்து மீட்டனர்.

இந்நிலையில் இதுகுறித்து இன்று தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீ விபத்திற்குள்ளான பழைய கட்டிடம் இடிக்கப்படும் என்றும், அங்கு ரூ.65 கோடி செலவில் நவீன வசதிகளுடன் புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.