மத்திய அரசுக்கு முன்னமே வரியை குறைச்சவங்க நாங்க! – பிரதமருக்கு பழனிவேல் தியாகராஜன் பதில்!
தமிழ்நாடு அரசு வாட் வரியை குறைக்காததே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என பிரதமர் பேசியுள்ளதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வேகமாக விலை உயர்ந்து வந்தது. தற்போது பல பகுதிகளிலும் பெட்ரோல், டீசல் விலை ரூ.100க்கும் அதிகமாக உள்ள நிலையில் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நடந்த மாநில முதல் அமைச்சர்களுடனான காணொலியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வாட் வரியை குறைக்காததாலேயே அம்மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உள்ளதாகவும், மத்திய அரசு வலியுறுத்தியும் அவர்கள் குறைக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
அவருக்கு பதிலளிக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் “மத்திய அரசு அறிவுறுத்தும் முன்னரே தமிழ்நாட்டில் வாட் வரி குறைக்கப்பட்டுவிட்டது. திமுக பொறுப்பேற்ற பின் கடந்த ஆகஸ்ட் மாதம் வாட் வரி குறைக்கப்பட்டதால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைந்தது” என்று தெரிவித்துள்ளார்.