1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (13:17 IST)

தஞ்சை தேர் விபத்து; பலர் உயிரை காப்பாற்றிய மின்வாரிய ஊழியர்!

Charriot
நேற்று தஞ்சாவூர் அருகே களிமேட்டில் நடந்த தேர் விபத்தில் பலர் உயிரை மின்வாரிய ஊழியர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவின் போது தேர் உயர் அழுத்த மின்கம்பிகளில் உரசியதால் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அன்று நடந்த விபத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட மக்களை மின்வாரிய ஊழியர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். தேர் விபத்தையடுத்து மக்கள் அப்பகுதிக்கு ஓடிய நிலையில் அதை பார்த்து அப்பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் திருஞானமும் அங்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு சூழ்ந்திருந்த தண்ணீரில் மின்சாரம் பரவியதை அவர் உணர்ந்துள்ளார். தண்ணீரில் காலை வைத்ததால் அவர் மின்சாரம் தாக்கி சென்று விழுந்து காயமடைந்துள்ளார். எனினும் தன் காயத்தையும் பொருட்படுத்தாமல் உடனடியாக தஞ்சையில் உள்ள மின்வாரிய உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக அவர்கள் களிமேட்டுக்கு செல்லும் மின்சார இணைப்பு வோல்டேஜை துண்டித்துள்ளனர். இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கிய மின்வாரிய ஊழியர் திருஞானம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.