வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (10:14 IST)

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பள்ளி தலைமை ஆசிரியர் கைது!

நாகர்கோவிலில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் போலீஸ் சுப்பிரண்டு அலுவலகம் அருகே அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை ஆசிரியராக நித்ய லட்சுமணவேல் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் லட்சுமணவேல் அடிக்கடி அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.

முதலில் அதை பொறுத்துக் கொண்டிருந்த மாணவிகள் ஒரு அளவிற்கு மேல் தங்களது பெற்றோர்களிடம் இதுகுறித்து கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இதுதொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன்படி தலைமை ஆசிரியர் லட்சுமணவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.