உங்களுக்கு சினிமா ஸ்டைல்லயே பதில் சொல்றேன்! – கமல் ட்வீட்டுக்கு செல்லூரார் பதிலடி!
தமிழகத்தில் மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்னதாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பருவ மழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை என்றும், கடந்த காலத்தில் சந்தித்த பேரிடர்களில் இருந்து அரசு எதையும் கற்கவில்லை என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியிருந்தார்.
அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ “சுனாமி பேரழிவு காலம் முதல் கஜா புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டது வரை அனைத்து காலத்திலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது. கமல்ஹாசனுக்கு சினிமா பாணியில் சொல்வதென்றால் அவர் ப்ளாஷ்பேக்கை நினைத்து பார்த்து பேச வேண்டும்” என்று கூறியுள்ளார்.