திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (13:47 IST)

பாலிடெக்னிக் வகுப்புகளில் நேரடியாக 2ஆம் ஆண்டு: அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

Ponmudi
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக 2ம் ஆண்டு பாலிடெக்னிக் வகுப்புகளில் சேர்வதற்கான அட்டவணை இன்று வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 
பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம்  என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 
மேலும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இந்த் ஆண்டு 10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் என கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்தார்.
 
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 10 முதிய பாடத்திட்டங்கள், 13 பாலிடெக்னிக் கல்லூரிகள் அறிமுகம் செய்யப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.