திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (16:21 IST)

ஊழல் குற்றச்சாட்டு: சுகாதாரத்துறை அமைச்சரை பதவி நீக்கிய முதல்வர்!

dismissed
ஊழல் குற்றச்சாட்டு: சுகாதாரத்துறை அமைச்சரை பதவி நீக்கிய முதல்வர்!
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சரை அம்மாநில முதல்வர் பதவி நீக்கம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் சிங் என்பவர் ஒப்பந்ததாரரிடம் கமிஷன் கேட்டதாக தெரிகிறது 
 
இதுகுறித்து விசாரணை செய்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சரை பதவியிலிருந்து நீக்கி உள்ளார் இதனால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஆம் ஆத்மி அரசு ஒரு ரூபாய் ஊழலை கூட சகித்துக் கொள்ளாது என்றும் லஞ்சம் என்ற பேச்சுக்கே ஆம் ஆத்மி அரசில் இடமில்லை என்றும் தவறு யார் செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அவர்கள் தெரிவித்துள்ளார்