1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 25 மே 2022 (22:23 IST)

கோதுமை ஏற்றுமதி தடையை நீக்க முடியாது: மத்திய அமைச்சர்

Wheat
கோதுமை ஏற்றுமதிக்கான தடையை இப்போதைக்கு நீக்க முடியாது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் மத்திய அரசு கோதுமையை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்தது இதனை அடுத்து விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
 
இந்த நிலையில் கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்க திட்டம் எதுவும் இல்லை என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார் 
 
கோதுமை ஏற்றுமதி தடையை நீக்கினால் கள்ளச்சந்தை வியாபாரிகள் தான் பயன் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்