1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Minister ponmudi in Enforcement director office

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு: அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரான பொன்முடி..!

Ponmudi
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜரானதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்ட விரோத பண பரிவர்த்தனை புகார் தொடர்பாக நவம்பர் 30ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இன்று அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

இன்று காலை ஆஜரான அவரிடம்  ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.  ஏற்கனவே பொன்முடி மற்றும் அவருக்கு தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் வெளிநாட்டு கரன்சி உள்பட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இந்த ஆவணங்கள் குறித்து இன்றைய விசாரணையில் அவரிடம் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இன்றைய விசாரணைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தனியார் லாபம் சம்பாதிக்க மக்கள் வரிப்பணமா? காலை உணவுத்திட்டம் குறித்து பிரின்ஸ் கஜேந்திரபாபு