வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2023 (14:55 IST)

தனியார் லாபம் சம்பாதிக்க மக்கள் வரிப்பணமா? காலை உணவுத்திட்டம் குறித்து பிரின்ஸ் கஜேந்திரபாபு

student food
காலை உணவு திட்டத்தை தனியாருக்கு விடப்போவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ள நிலையில் லாபம் இல்லாமல் எந்த தனியாரும் செய்ய மாட்டார்கள் என்றும் தனியார் லாபம் சம்பாதிக்க மக்கள் வரிப்பணத்தை பயன்படுத்துவதா? என  பிரின்ஸ் கஜேந்திர பாபு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  
 
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில்  சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இந்த திட்டத்தை தனியாருக்கு வழங்க போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  
 
சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தனியாருக்கு இந்த திட்டத்தை நடத்த  ஒப்புதல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்  இது குறித்து பொது பள்ளிகளுக்கான மாநில பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் 
 
மாநகராட்சி நிர்வாகம்  காலை உணவு திட்டத்தை தனியாருக்கு கொடுப்பது மாநகராட்சியின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது என்றும் மதிய உணவு சமைக்கும் சத்துணவு ஊழியர்கள் காலை உணவு சமைப்பதில் என்ன சிரமம் ஏற்பட போகிறது என்றும் தனியாருக்கு தரக்கூடாது என்றும் தனியாருக்கு கொடுத்தால்  குழந்தைகளின் உணவுக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran