1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (09:12 IST)

”ஓசி” என பேசியது தவறுதான்..? வருந்திய பொன்முடி! – முதல்வர் பேசியது காரணமா?

Ponmudi
சமீபத்தில் அமைச்சர் பொன்முடி பெண்களுக்கான இலவச பேருந்து சேவை குறித்து பேசிய விதம் சர்ச்சையான நிலையில் அதற்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக திமுக அமைச்சர்கள் பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பலவித சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தன. இது மக்களிடையேயும் சில அதிருப்திகளை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்த திமுக விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவங்கள் குறித்து தனது வேதனையை பகிர்ந்திருந்தார்.


இந்நிலையில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி மற்றும் துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி “இப்போதெல்லாம் ‘வாயா போயா’ என பேசவே பயமாக இருக்கிறது. பாஜக டார்கெட் செய்து அரசியல் செய்கிறார்கள். ஒரு வார்த்தையை பிடித்துக் கொள்கிறார்கள். முதல்வர் இதுபோன்று பேச வேண்டாம் என என்னை அறிவுறுத்தினார். உண்மையில் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் உண்மையாகவே வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Edited By: Prasanth.K