செவ்வாய், 11 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 27 ஜூலை 2025 (16:40 IST)

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!
இரண்டு நாள் தமிழகப் பயணத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு விரிவாக்கப்பட்ட விமான நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றினார். 
 
தனது உரையில், கார்கில் வெற்றி நாளை நினைவு கூர்ந்து வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். மேலும், இந்தியா-இங்கிலாந்து இடையே கையெழுத்தான வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் எனத் தெரிவித்தார். 
 
தூத்துக்குடியில் ரூ. 4800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார். வ.உ.சி, வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்துக்கோன், பாரதியார் போன்ற தூத்துக்குடியின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆளுமைகளையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். 
 
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 'ஆபரேஷன் சிந்தூர்' திட்டத்தில் 'மேக் இன் இந்தியா' ஆயுதங்களின் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், இது நாட்டின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவதைச் சுட்டிக்காட்டினார்.
 
மேலும் கடந்த தான் தூத்துக்குடியின் முத்துகளை பில் கேட்ஸூக்கு பரிசாக அளித்ததாகவும், அவருக்கு அந்த முத்துகள் ரொம்பவே பிடித்திருந்தது என்றும் பிரதமர் மோடி தனது உரையில் கூறினார்.
 
Edited by Siva