திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2022 (18:16 IST)

சட்டமன்றத்தில் இதைப்பற்றி பேசக்கூடாது: அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு ஈபிஎஸ் உத்தரவு!

edappadi
சட்டமன்றத்தில் அதிமுகவின் உட்கட்சி விஷயங்கள் குறித்துப் பேசக் கூடாது என அதிமுக எம்எல்ஏக்களுக்கு  அதிமுக பொதுச்செயலாளர்எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார் 
 
அதிமுக தற்போது பிளவுபட்டு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் என இரு பிரிவுகளாக உள்ளன. இரு பிரிவுகளிலும் எம் எல் ஏ க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சட்டமன்ற சிறப்பு கூட்டம் விரைவில் கூட இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி புதிய உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார்
 
இதன்படி அதிமுக உட்கட்சி பிரச்சனையை சட்டமன்றத்திற்குள் கொண்டுவரக் கூடாது எனவும் மக்கள் பிரச்சினை. தொகுதி சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே சட்டமன்றத்தில் பேச வேண்டும் என்றும் எம்எல்ஏக்களுக்கு இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

Edited by Mahendran