வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 12 அக்டோபர் 2022 (14:37 IST)

எடப்பாடி பழனிசாமியால்தான் மக்கள் திமுகவிற்கு வாக்களித்தனர்: டி.டி.வி. தினகரன்

ttv dinakaran
எடப்பாடி பழனிசாமியின் தவறான நிர்வாகத்தால் தான் பொதுமக்கள் திமுகவுக்கு வாக்களித்தனர் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 
 தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுமாறு டிடிவி தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட டிடிவி தினகரன் பேசியபோது ’எடப்பாடி பழனிசாமியின் தவறான நிர்வாகத்தால் தான் மக்கள் திமுகவுக்கு வாக்களித்தனர் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் திமுகவில் திணிக்கப்பட்ட தலைவர்கள் இருப்பதால்தான் அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை அவர்கள் பேசுவது யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் முக ஸ்டாலின் அவர்களே புலம்புவதை பார்க்கும்போது மக்கள் சிரிக்கிறார்கள் என்றும் பேசினார்
 
அமைச்சர்கள் கார் வீடு எல்லாம் ஓசியாக அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்களைப் பார்த்து ஓசி என அமைச்சர் பொன்முடி பேசுவது அராஜகம் என்றும் ஆனால் அவ்வாறு அவர் பேசி உள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் 
 
 
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் தான் வலியுறுத்தியதாகவும் அவர் கேட்டுக்கொண்டார்
 
Edited by Siva