திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 அக்டோபர் 2022 (17:32 IST)

முலாயம் சிங் இறுதிச் சடங்கில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

udhaya
முலாயம் சிங் இறுதிச் சடங்கில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!
உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக காலமான நிலையில் இன்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. 
 
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முலாயம் சிங் யாதவின் சொந்த ஊரில் இன்று அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அதன் பின் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
 
இந்த இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் 
இந்த நிலையில் திமுக சார்பில் திமுகவின் பொருளாளர் டி ஆர் பாலு மற்றும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முலாயம் சிங் யாதவின் கலந்து கொண்டனர் 
 
Edited by Siva