செவ்வாய், 18 ஜூன் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 10 அக்டோபர் 2022 (21:41 IST)

அதிமுக வில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி

karur
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி அதிமுக வில் இணைந்துகொண்டார்.
 
 
கரூர் மாவட்டம், மாயனூர் பகுதியை சார்ந்தவர் சிவானந்தம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியும், மாவட்ட ஊராட்சி கவுன்சிலருமான இவர், கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுக வில் இணைந்தார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட பொருளாளருமான கண்ணதாசன் உடனிருந்தார். சிவானந்தம் அதிமுகவின் இணைந்த சம்பவம் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.