வெட்டி விளம்பரத்துக்கும், போட்டோவிற்கு போஸ் கொடுப்பது மட்டுமே மாஜி அமைச்சர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு
கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் இன்று மூன்றாவது நாளாகவும் அரவக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட பகுதி பொதுமக்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முதல்வரின் சிறப்பு மனுக்கள் பெறும் முகாமில் கொடுக்கப்பட்டிருந்த முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் என்று 1537 பயனாளிகளுக்கு, 12 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்க பட்டது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்ட இந்த விழாவில்., நிகழ்ச்சிக்கு முன்னதாக பேசிய அவர் பேசிய போது., எந்த ஒரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், மருத்துவக்கல்லூரிக்கும் கரூரில் உள்ளதை போல் கார் பார்க்கிங் வசதி கிடையாது சுமார் 300 கோடி மதிப்பில் கரூர் காந்திகிராமத்தில் அரசு மருத்துவக்கல்லூரியையும், மருத்துவமனையையும் கொண்டு வந்ததை சுட்டிக்காட்டிய அவர், நேற்று வந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு கூட பாராட்டியது என்றார்.
அப்படி பல்வேறு திட்டங்களை தீட்டி வரும் ஆட்சி தான் அ.தி.மு.க வின் ஜெயலலிதாவின் ஆட்சி, அதே போல தான் 18 ஆண்டுகாலமாக ஆத்துப்பாளையம் அணையிலிருந்து கார்வழி பகுதியில் தடையாணையை நீக்கி, தற்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. ஆனால், ஒரு சிலர் வெறும் போட்டோவிற்கு போஸ் கொடுத்து விட்டு வெறும் விளம்பரத்திற்காகவே ஒருவர் இங்கே இருந்து வருகின்றார். என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மறைமுகமாகவே தாக்கினார். ஆனால் அவரோ, அரசு நினைத்தால் தடையாணையை ஒரே நாளில் தகர்த்திடலாம் என்றும் கூறியிருக்கின்றார்.
ஆனால் அவர் அமைச்சர் பதவியில் இருக்கும் போது அதே ஒரு நாள் இல்லையா ? 8 வருடம் எம்.எல்.ஏ, 4 ½ வருடம் அமைச்சர் என்ற பொறுப்புகள் கொண்ட அவர் ஆட்சியில் இருக்கும் போது அந்த ஒரு நாள், வரவில்லையா என்று கூறிய அவர், 2 ½ ஏக்கர் நிலம் தருவதாக தி.மு.க வின் மறைந்த முன்னாள் தலைவர் கருணாநிதி கூறினார்.
ஆனால் கொடுத்தாரா ? என்று வினா எழுப்பியதோடு, இன்றுவரை தேர்தலில் ஜெயித்த பிறகும் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை கொடுப்பது இந்த ஜெயலலிதாவின் அரசும், மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமியின் அரசும் தான் என்றார். இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட்னர்.