வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : புதன், 20 நவம்பர் 2019 (21:39 IST)

பொய் வழக்கிற்காக, பேஸ்புக்கில் லைவ் வில் சாக முயற்சி செய்த இளைஞர்... பரபரப்பு சம்பவம் !

கரூரில் இளைஞர் ஒருவர் மீது காவல் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பதாக கூறி முகநூலில் லைவ்வாக விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டியை சார்ந்த கணேசன் என்பவரின் மகன் சதானந்தம். வயது 23. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு பெயிண்ட் அடிக்க மற்றும் மாட்டு வண்டியில் மணல் அள்ளி விற்பனை செய்யும் வேலைகளை பார்த்து வருகிறார். 
 
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இவர் மீது பசுபதிபாளையம் போலீசார் அடிக்கடி பிடித்து பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைக்கப்படுவதாகவும், தண்டனை காலம் முடிந்த பிறகு வேலைக்கு செல்வதை வாடிக்கையாக சதானந்தம் செய்து வந்துள்ளார். 
 
இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக காணாமல் போயிருந்த  நிலையில் நேற்று இரவு அமராவதி ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டு குளிர் பானத்தில் எறும்பு மருந்தை கலந்து குடித்தார். 
 
இது தொடர்பான வீடியோவை லைவாக முகநூலில் ஒளிபரப்பினார். அதில் தன்னுடைய சாவிற்கு காரணம் பசுபதிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் தன்மீது பொய் புகாரை பதிவு செய்வதாகவும், அதனால் தான் தற்கொலை செய்து கொள்வதாக பேசியுள்ளார். 
 
இதனையடுத்து அந்தப்பகுதியில் இருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் இளைஞரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அந்த இளைஞர் அபாய கட்டத்தை தாண்டி தற்போது நன்றாக உள்ளார். இது தொடர்பாக பசுபதிபாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்