வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2019 (21:10 IST)

ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள்..நன்றி தெரிவித்த திருவள்ளுவர் மாணவர் இளைஞர் பேரியக்கம்!

தமிழக அரசிற்கும், பால்வளத்துறைக்கும் கல்வித்துறைக்கும், தமிழக அரசிற்கும்  அகில இந்திய திருவள்ளுவர் மாணவர் இளைஞர் பேரியக்கம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

அகில இந்திய திருவள்ளுவர் மாணவர் இளைஞர் பேரியக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியன் கரூரில்  செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழக அரசின் ஆவின் பால்பாக்கெட்டுகளில் திருக்குறளை வெளியிட உள்ளதற்கு நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்த அவர், திருக்குறள் இல்லந்தோறும், உள்ளந்தோறும் செல்ல வேண்டுமென்றும், பள்ளிப்பாடத்திட்டத்தில் திருக்குறளை அதிகம் கூறும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் கொடுக்கும் கல்வித்துறையின் அறிவிப்பினை அமைச்சர் அண்மையில் பேட்டியில் பார்த்ததையதையும் அறிந்ததற்கும் வரவேற்பையும் பாராட்டுகளையும் தெரிவித்த அவர், திருக்குறள் படிக்கும் மாணவர்களுக்கு இது மிகவும் உற்சாகத்தினை ஏற்படுத்துவதோடு, ஊக்க மதிப்பெண்கள் கொடுப்பது மாணவர்களிடையேயும் வரவேற்பை தரும் என்றார்.

ஆகவே பால்வளத்துறை அமைச்சருக்கும், கல்வித்துறை அமைச்சருக்கும், தமிழக முதல்வருக்கும் அகில இந்திய திருவள்ளுவர் மாணவர் இளைஞர் பேரியக்கத்தின் சார்பில் பாராட்டுகளை தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.