பட்டப்பகலில் பயங்கரம் : ஓ.எஸ். மணியன் உதவியாளர் வெட்டிக்கொலை

Last Modified செவ்வாய், 24 ஜூலை 2018 (12:54 IST)
அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக திகழ்ந்த ரமேஷ்பாபு என்கிற நபர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரம் சீர்காழில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாகை மாவட்டம் சீர்காழி திரிபுரசுந்தரி நகரை சேர்ந்தவர் ரமேஷ்பாபு(45) அதிமுக கொள்ளிடம் ஒன்றிய மாணவரணி செயலாளர். மேலும் கான்ராக்டர் தொழிலிலும் ஈடுபட்டு வந்த இவர் அதிமுகவின் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் மற்றும் எஸ்பி வேலுமணிக்கு நன்பராக திகழ்ந்தார். இவர் ஓ.எஸ். மணியனுக்கு உதவியாளராகவும் பணிபுரிந்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று காலை 11:30 மணிக்கு சீர்காழி வடக்கு வீதியில் உள்ள கான்ராக்டர் வீட்டுக்கு சென்றுவிட்டு காரில் ஏறும் போது காரில் வந்த மர்மகும்பல் ஒன்று ரமேஷ்பாபு மீது அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டு வீசியுள்ளனர். இதில் தலை முற்றிலும் சிதைந்த நிலையில் ரமேஷ்பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
 
தகவலறிந்த சீர்காழி டிஎஸ்பி சேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வி ரைந்து வந்து ரமேஷ்பாபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்ததுடன், ரமேஷ்பாபு பயன்படுத்திய கைதுப்பாக்கி, செல் போன் ஆகியவற்றை கைப்பற்றி விசாரனை மேற்கொண்டுள்ளதுடன், தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடிவருகின்றனர். 
 
மேலும் இந்த கொலை தொழில் விரோதம், அல்லது அரசியல் விரோதத்தினால் நடைபெற்றதா எனவும் விசாரனை நடைத்தி வருகின்றனர். 
 
இச்சம்பவத்தை தொடர்ந்து கலவரம் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட ரமேஷ்பாபுவுக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். சீர்காழி நகரில் பட்டம்பகலில் நடைபெற்ற இக்கொலை சம்பவத்தால் சீர்காழியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :