திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஜூலை 2018 (12:27 IST)

பிச்சை எடுத்து கணவரின் இறுதிச் சடங்கை செய்த மனைவி

ஆந்திராவில் பெண் ஒருவர் பிச்சை எடுத்து தனது கணவனின்  இறுதிச் சடங்கை நடத்திய சம்பவம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த பாபுசாயுபு என்பவர் கட்டிட மேஸ்திரியாக இருந்து வந்தார். இவருக்கு உடம்பு சரியில்லாததால் கடந்த சில நாட்களாக மதனப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது மனைவி தவுலத்பீவி கணவரை மருத்துவமனையில் அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
 
இந்நிலையில் பாபுசாயுபு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கணவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லவும், அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யவும்  தவுலத் பீவியிடம் பணம் இல்லாததால் அவர் கதறி அழுதார்.
 
இதனையடுத்து அவர் மருத்துவமனை வாசலில் அமர்ந்து கொண்டு, மருத்துவமனை ஊழியர்களிடமும் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள், அவர்களுடன் வந்தவர்களிடமும் பிச்சை எடுத்தார். இந்த காட்சி பார்ப்போரின் நெஞ்சை பதற வைக்கும் விதமாக இருந்தது.
 
இறுதியில் பிச்சை எடுத்த பணத்தை வைத்துக் கொண்டு, கணவனின் உடலை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தனது சொந்த ஊருக்குக் கொண்டு சென்று இறுதிச்சடங்கை செய்தார்.