வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 13 நவம்பர் 2021 (09:33 IST)

கடலூர் மாவட்டத்தில் முதல்வர் இன்று ஆய்வு: 18 பேர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார் 
 
மேலும் உடனுக்குடன் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வெள்ள மீட்பு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மீட்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்
 
மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பது மற்றும் குறிஞ்சிப்பாடி ராஜா குப்பம் என்ற பகுதியில் 18 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது ஆகிய பணிகளையும் முதல்வர் என்று செய்தார் என்பது குறிப்பிடப்பட்டது