வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 3 ஏப்ரல் 2023 (15:24 IST)

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை தொடர்பாக விரைவில் தீர்வு - அமைச்சர் தகவல்

i periyasamy
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை தொடர்பாக விரைவில் தீர்வு வரும் என்று அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார்.

தனியார் நிறுவனங்கள் பாலின் கொழுப்பு அளவைப் பொறுத்து லிட்டருக்கு ரூ.40 முதல் ரூ.47 வரை வழங்குகிறது. தமிழ் நாடு அரசு நிறுவனமான ஆவின் நிறுவனம் ரூ.35 முதல் ரூ.44 என்ற விலையில் கொள்முதல் செய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஆவின் நிறுவனம கொள்முதல் செய்யும் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.7 உயர்த்தி வழங்க வேண்டுமென்று பால் உற்பத்தியாளர்கள் பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், பால்உற்பத்தியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக,''  பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை குறித்து, இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ பெரியசாமி, ‘’பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை தொடர்பாக தொடர்பாக விரைவில் தீர்வு வரும் என்று கூறினார்.

இந்த நிலையில், ‘’பால் கொள்முதல் விலையை   உயர்த்தக்கோரி வரும் 28-30 வரை கறவை மாடுகளுடன் போராட்டம் நடைபெறும் பால் உற்பத்தியாளார் சங்க  மாநில தலைவர் முகமது அலி கூறியது ''குறிப்பிடத்தக்கது.