திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 26 ஏப்ரல் 2023 (18:14 IST)

ரூ.43,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தின் வேலை.. சூப்பர் அறிவிப்பு..!

aavin
ரூபாய் 43 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தின் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளதை  அடுத்து தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
 
கன்னியாகுமரி மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒரே ஒரு காலியிடம் இருப்பதாகவும் இந்த பணிக்கு கால்நடை மருத்துவ படிப்பு மற்றும் கணினி அறிவு இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மே மாதம் 17ஆம் தேதி காலை 11 மணியளவில் உரிய சான்றிதழ் உடன் நேரடி நியமத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் தேர்வு செய்யப்படுபவருக்கு ரூ.43 ஆயிரம் சம்பளம் மற்றும் இதர வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் இந்த பணி முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் பணி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி தேர்வு நடைபெறும் இடம் பின்வருமாறு: 
 
நேரடி தேர்வு நடைபெறும் இடம்:  The Kanyakumari District Cooperative Milk Producers Union Ltd., K.P.Road,
 
Nagercoil – 629 003. , Tamil Nadu .
 
 
Tel : 04652 - 230356
 
Edited by Mahendran