திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 5 ஏப்ரல் 2023 (17:57 IST)

செயலி மூலம் ஆவின் பொருட்கள் விற்பனை: அமைச்சர் தகவல்..!

புதிய செயலி மூலம் பால் உள்பட ஆவின் பொருள்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தற்போது உலகம் முழுவதும் அனைத்து பொருள்களும் செயலி மூலம் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. வீட்டில் உட்கார்ந்து கொண்டே அனைத்து வகையான பொருட்களையும் வாங்கும் வசதி தற்போது கிடைத்துள்ள நிலையில் ஆவின் பொருள்களையும் அதுபோல் வாங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பல மாதங்களாக கோரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் தமிழக அரசு ஆவின் பொருள்களை விற்பனை செய்வதற்காக புதிய செயலியை உருவாக்கி உள்ளது. இந்த செயலி மூலம் இணையவழியில் பால் உள்பட ஆவின் பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். 
 
முதல் கட்டமாக இந்த வசதி சென்னை மற்றும் இதர மாநகரங்களில் விற்பனை தொடங்கப்படும் என்றும் அதன் பிறகு படிப்படியாக தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் செயலி மூலம் ஆவின் பொருட்கள் விற்பனை தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Siva