1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 ஜூன் 2021 (20:10 IST)

அம்மா மினிகிளினிக் செயல்படுமா? அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் பல பகுதிகளில் அம்மா மினி கிளினிக்கை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடங்கி வைத்தார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது மினி கிளீனிக் தொடர்ந்து செயல்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பேட்டி அளித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கொரோனா தோற்று முழுமையாகக் கட்டுக்குள் வந்த பிறகு மீண்டும் அம்மா கிளினிக் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்
 
அரசு மருத்துவர்களின் தேவைகளை கண்டறிந்து பூர்த்தி செய்து வருகிறோம் என்று கூறிய அமைச்சர் மா சுப்பிரமணியன் அம்மா கிளினிக்கை மீண்டும் செயல்பட வைக்க அரசு முழு ஒத்துழைப்பு தரும் என்றும் தெரிவித்தார் 
 
தற்போது வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவர்கள் பற்றாக்குறை இல்லாததால் அம்மா மினி கிளீனிக் செயல்படவில்லை என்றும் ஆனால் மீண்டும் சில மாதங்கள் கழித்து கண்டிப்பாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்