உடல்நலம் சரியில்லாத நாய்; சிகிச்சையில் சிக்கிய பொருள்! – மருத்துவர்கள் அதிர்ச்சி!
சென்னையில் உடல்நலம் சரியிலாமல் இருந்த நாய் ஒன்றிற்கு சிகிச்சை செய்தபோது கிடைத்த பொருள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் சைபேரியன் ஹஸ்கி வகையை சேர்ந்த நாய் ஒன்று சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால் அங்குள்ள கால்நடை மருத்துவமனைக்கு அது கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவர்கள் அதற்கு சிகிச்சை அளித்தபோது வாய்க்குள் எதோ இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
பின்னர் உரிய சிகிச்சை அளித்து நாயின் வாயிலிருந்து அந்த பொருளை எடுத்தப்போது, அது ஒரு முகக்கவசம் என தெரிய வந்துள்ளது. கொரோனா காரணமாக மக்கள் முகக்கவசம் அணிய தொடங்கியுள்ள நிலையில் அவற்றை முறையாக அப்புறப்படுத்தாமல் வீதிகளில் வீசுவதால் விலங்குகள் அவற்றை விழுங்கிவிடும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.