மருத்துவர்கள் மீதான தாக்குதல்… மலையாள நடிகர்கள் ஆவேசம்!

Last Modified வியாழன், 10 ஜூன் 2021 (18:35 IST)

கொரோனாவுக்கு எதிராக தங்கள் உயிரைப் பணயம் வைத்து போராடி வரும் மருத்துவர்களுக்கு எதிரான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என மோகன்லால் கூறியுள்ளார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா எனும் கொடிய வைரஸுக்கு எதிராக மனித இனம் போராடிக்கொண்டு இருக்கிறது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அப்படி இந்தியாவில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சில இடங்களில் கொரோனா தொற்று நோயாளிகளின் சிகிச்சைப் பலனளிக்காமல் இறக்கும் போது அவர்களின் உறவினர்கள் மருத்துவர்களை தாக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இது சம்மந்தமாக மலையாள நடிகர்கள் மோகன்லால் மற்றும் பிருத்விராஜ் ஆகிய இருவரும் இது போன்ற தாக்குதல்கள் கூடாது என டிவீட் செய்துள்ளனர். மேலும் மருத்துவர்கள்ய்தான் இந்த வைரஸுக்கு எதிரான போரின் முன்களப் போர்வீரர்கள் எனக் கூறியுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :