1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (16:24 IST)

மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறேனா? அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண்நேரு பேட்டி..!

அமைச்சர் கே என் நேருவின் மகன் அருண் நேரு மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார். 
 
மக்களவைத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் திமுக பிரபலங்களின் வாரிசுகள் இந்த தேர்தலில் அதிகம் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று தமிழ்நாடு அரசு விழா ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் நேருவின் மகன் செய்தியாளர்களிடம் பேசினார் 
 
அப்போது அவரிடம் ’வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறீர்களா? எந்த தொகுதியில் போட்டிருக்கிறீர்கள் என்று கேட்கப்பட்ட போது தலைமை என்னை போட்டியிடச் சொன்னால் போட்டியிடுவேன் என்றும் எந்த தொகுதி என்பதை தலைமை தான் முடிவு செய்யும் என்றும் கூறினார் 
 
மேலும் வரும் நாடாளுமன்ற தொகுதியில் திமுக அமோக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த பேட்டியை அடுத்து கேஎன் நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது
 
Edited by Mahendran