திங்கள், 15 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (13:03 IST)

’லால் சலாம்’ சக்சஸ் மீட் நிகழ்ச்சிக்கு வராத 2 நடிகர்கள்.. என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’  படத்தின் சக்சஸ் மீட்டிங் இன்று நடந்த நிலையில் இந்த சக்சஸ் மீட்டிங்கில் இரண்டு முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான திரைப்படம் லால் சலாம். இந்த படம் சமீபத்தில் வெளியான நிலையில் முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்ததால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

மேலும் இந்த படத்தால் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கு மிகப்பெரிய நஷ்டம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் சக்சஸ் மீட்டிங் இன்று நடந்த நிலையில் இதில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ஏ ஆர் ரகுமான் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

ஆனால் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு விஷால் தற்போது கொடைக்கானலில் படப்பிடிப்பில் இருப்பதாகவும் விக்ராந்த் ஒரு முக்கிய பணியாக வெளியூர் சென்று இருப்பதாகவும் கூறப்பட்டாலும் இந்த சக்சஸ் இருவரும் கலந்து கொள்ளாதது பல கேள்விகளை எழுப்பி உள்ளது

Edited by Mahendran