1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. minister kn nehru says about bjp

பாஜக நுழையவிடாமல் இருப்பது மாணவர்கள் கையில் உள்ளது: அமைச்சர் நேரு

KN Nehru
பாஜகவை தமிழகத்தில் நுழைய விடாமல் இருப்பது மாணவர்களின் கையில் தான் உள்ளது என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். 
 
இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் நேரு அவர்கள் மூன்றாம் வகுப்பில் இருந்தே நுழைவு தேர்வு வைத்து பாஜக எப்படியாவது தமிழகத்தில் உள்ள முயற்சிக்கிறது என்றும் பாஜகவை உள்ளே நுழைய விடாமல் இருப்பது மாணவர்கள் கையில் தான் உள்ளது என்றும் பேசினார்
 
ஆனால் அதே நேரத்தில் பாஜக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை தற்போது இல்லை என்றும் தமிழகத்தில் பாஜக நுழைந்து விட்டது என்றும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது தான் இனி திராவிட கட்சிகளின் வேலையாக இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்
அடுத்த கட்டுரையில்
என்னுடைய எதிர்காலத்தை அவர்கள்தான் முடிவு செய்யணும்! – மனம்திறந்த ஓபிஎஸ்!