திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (19:31 IST)

எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை சந்தித்தது ஏன்? ஜெயகுமார் விளக்கம்

Jayakumar
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாறி மாறி சந்தித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் அதிமுக ஒற்றை தலைமை குறித்து அண்ணாமலையுடன் ஆலோசனை செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்
 
பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டனர் என்றும் மற்றபடி அதிமுக உள்கட்சி விவகாரங்களில் பாஜக எப்போதும் தலையிட்டது இல்லை என்றும் தெரிவித்தார் 
 
மேலும் அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து பாஜகவிடம் எந்தவித ஆலோசனையும் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்