திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 3 பிப்ரவரி 2021 (16:35 IST)

கொரோனாவில் இருந்து மீண்டார் அமைச்சர் காமராஜ்: எப்போது டிஸ்சார்ஜ்?

தமிழக உணவுத்துறை அமைச்சர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருடைய உடல் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் அவ்வப்போது தெரிவித்தனர்
 
அமைச்சர் காமராஜரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கேட்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உடல் நலம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் அளித்த பேட்டியில் ஒரு மாத தொடர் சிகிச்சைக்குப் பின்னர் விழுந்து அமைச்சர் காமராஜ் மீண்டு விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்
 
மேலும் அவர் இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது