திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (15:08 IST)

நேருக்கு நேர் மோதலைத் தவிர்த்த இளம் நடிகர்கள்… ஒருவேளை பழைய பாசமா இருக்குமோ!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில் இப்போது மார்ச் மாத கடைசியில் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி அவரை வைத்து எதிரிநீச்சல் மற்றும் காக்கிச் சட்டை ஆகிய படங்களை தயாரித்தவர் தனுஷ். நகமும் சதையுமாக இருந்த இவர்கள் இருவரின் நட்பு சமீபகாலமாக முன்னர் போல இல்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இவர்கள் இருவரின் படமும் முதல் முறையாக நேருக்கு நேர் மோத உள்ளது. தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படமும் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படமும் ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது தங்கள் படத்தின் ரிலீஸை ஒரு வாரம் முன்னதாகவே மார்ச் மாதம் 26 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாம். இதனால் நேருக்கு நேர் மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது.