செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (15:16 IST)

அமைச்சரிலிருந்து பாடகராக மாறிய அமைச்சர் ஜெயக்குமார்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் எம்.ஜி.ஆர் பாடல்களை பாடி அசத்தினார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கிறது. இதனால் சென்னை முழுவது பல இடங்களுல் பிரம்மாண்டமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. தமிழகமெங்குமிலிருந்து ஏராளமாக தொண்டர்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இவ்விழாவில் 7 லட்சம் பேர் பங்கேற்கப் போகிறார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் இவ்விழாவில் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. அங்கிருந்த அமைச்சர் ஜெயக்குமாரை எம்ஜிஆர் பாடல்களை பாடுமாறு கட்சியினர் வலியுறுத்தினர். 
கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க ஜெயக்குமார் எம்.ஜி.ஆரின் அழகிய தமிழ்மகள் இவள் என்ற பாடலை பாடினார். பின்னர் நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க பாடலை பாடினார். அங்கிருந்தவர்கள் அமைச்சரின் பாடல்களுக்கு பலத்த கரகோஷங்களை எழுப்பினர்.
 
அமைச்சர் ஜெயக்குமாருக்கு இப்படியொரு தனித்திறமை இருக்கிறதா என சமூக வலைதளங்களில் பலர் அவரை பாராட்டித் தள்ளி வருகின்றனர்.