திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 29 டிசம்பர் 2020 (17:45 IST)

ரஜினி ஆதரவு எங்களுக்கே… அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி!

நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு கொடுத்தால் அது எங்களுக்கே இருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இன்னும் சில நாட்களில் அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினி அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்ட ரஜினிகாந்த், தன்னால் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்றும், அதனால் அரசியல் கட்சி தொடங்குவதை கை விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதை மிகவும் மன வேதனையுடன் அறிவிப்பதாக கூறியுள்ள அவர் தன்னை நம்பி உள்ளவர்களை படுகுழியில் தள்ள விரும்பவில்லை என்றும், தன்னாலான உதவிகளை மக்களுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு செய்வதாகவும் கூறியுள்ள அவர், அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்நிலையில் அவரின் முடிவு மற்ற அரசியல் கட்சிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் அனைவரும் அவரது முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசியுள்ள அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ‘மக்களுக்கு யார் நல்ல செய்தாலும் அவர்களை ஆதரிப்பவர் ரஜினி. அதனால் மக்களுக்கு நன்மை செய்யும் அம்மாவின் ஆட்சிக்கே ரஜினியின் ஆதரவு இருக்கும். திமுக ஆட்சியில் திரைப்படத்துறை எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது என்று ரஜினிக்கு நன்றாக தெரியும். அப்படி இருக்கும்போது ரஜினி ஆதரவு என்று கொடுத்தால் எங்களுக்குதான் கொடுப்பார்’ எனக் கூறியுள்ளார்.