திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 29 டிசம்பர் 2020 (17:36 IST)

ரஜினி உயிருக்குப் பயந்தவரல்ல...பின்னணியில் அழுத்தம் உள்ளது - பிரபல இயக்குநர்

ஏற்கனவே டிசம்பர் 31 ஆம் தேதி புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக கூறியிருந்த ரஜினிகாந்த் ’’தான் கட்சி தொடங்கப்போவதில்லை என’’ இன்று தனது அறிக்கையில் தெளிவாக விளக்கி தனது உடல்நிலைகுறித்தும் தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் அவரது முடிவு அவரது கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அவரது வீட்டுக்கு முன் அமர்ந்து அவரது ரசிகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒவ்வொரு பேட்டியிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் ரஜினிக்கு ஆதரவாகப் பேசி வந்த ரட்சகம், ஜோடி பட இயக்குநர் ரஜினியின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

நடிகர் ரஜினிகாந்த் உயிருக்குப் பயந்தவரல்ல …அவர் இவ்வாறு கூறியிருப்பதற்கு பின் எதோவொரு அழுத்தம் உள்ளது. தனது உயிரே போனாலும் பரவாயில்லை என்று கூறியவர் தற்போது அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை எனக் கூறியுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் எனத் தெரிவித்துள்ளார்.