1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Minister Jayakumar slams DMK

கருப்பர் கூட்டத்திற்கு கருப்பு கொடி தூக்காதது ஏன்? திமுகவிற்கு ஜெயகுமார் கேள்வி!

கருப்பர் கூட்டம்
ஒரு மதத்தை இழிவு படுத்திய கருப்பர் கூட்டத்திற்கு எதிராக ஏன் திமுக போராட்டம் நடத்தவில்லை என ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்று கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில் கந்தகஷ்டி கவசத்தில் இடம்பெற்று ஒருசில வார்த்தைகளை ஆபாசமாக விமர்சனம் செய்தது முருகன் பக்தர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  
 
அருவருப்பாகவும் ஆபாசமாகவும் அவர் செய்த விமர்சனம் இந்து மத ஆதரவாளர்களை குறிப்பாக முருக பக்தர்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது குறித்து பல்வேறு காவல் நிலையங்களில் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அந்த யுட்யூப் சேனல் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ஜெயகுமார், எந்த மதமாக இருந்தாலும் மதிக்க வேண்டும். அந்த வகையில், அனைத்திற்கும் போராட்டம் நடத்தும் திமுக, ஒரு மதத்தை இழிவு படுத்திய கருப்பர் கூட்டத்திற்கு எதிராக ஏன் போராட்டம் நடத்தவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஆகஸ்ட் 31-க்குள் 40 % கல்விக் கட்டணம் வசூல்: திக்குமுக்காடும் பெற்றோர்?