திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 17 ஜூலை 2020 (09:44 IST)

உதயநிதியுடன் மீராமிதுன்: திமுகவில் இணைகிறாரா?

உதயநிதியுடன் மீராமிதுன்: திமுகவில் இணைகிறாரா?
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவார் என்பது தெரிந்ததே. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினி மற்றும் விஜய் மீது அவர் பதிவு செய்த ஒரு டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
அதுமட்டுமின்றி ரஜினியை கன்னடர் என்றும் விஜய்யை கிறிஸ்துவர் என்றும் இருவர் மீதும் தான் சைபர் கிரைமில் புகார் அளிக்கப்போவதாகவும் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அவர் திடீரென உதயநிதியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்
 
அந்த டுவீட்டில் ‘புதிய சகாப்தத்தை உருவாக்குவோம்’ என்று உதயநிதியின் டுவிட்டர் பக்கத்தை ஹேக் செய்தும், ‘நாம் இணைந்து வெற்றி பெறுவோம்’ என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் டுவிட்டர் பக்கத்தை ஹேக் செய்தும் பதிவு செய்துள்ளார் 
 
இந்த டுவிட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விரைவில் அவர் திமுகவில் சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே மீரா, ஆளும் கட்சியையும் ரஜினி மற்றும் விஜய்யையும் விமர்சனம் செய்ததில் இருந்தே அவர் திமுக பக்கம் சாய்ந்து வருவதாக நெட்டிசன்கள் சந்தேகப்பட்டனர். அது தற்போது உண்மையாகியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்