வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 17 ஜூலை 2020 (16:38 IST)

கேபி அன்பழகனை அடுத்து இன்னொரு அமைச்சரும் கொரோனாவில் இருந்து குணம்

இன்னொரு அமைச்சரும் கொரோனாவில் இருந்து குணம்
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் கொரோனாவுக்கு அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள், அமைச்சர்களும் பாதிக்கப்பட்டு வருவதையும் பார்த்து வருகிறோம். இருப்பினும் தமிழகத்தை பொருத்தவரை கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது
 
அந்த வகையில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட கல்வி அமைச்சர் அன்பழகன் அவர்கள் குணமகி வீடு திரும்பிய நிலையில் தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்களும் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளார்
 
அமைச்சர் செல்லூர் ராஜூ வீடு பூரண குணம் என்று  மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்ததை அடுத்தே அவர் வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபில் அவர்களும் குணமாகி வருவதாகவும் விரைவில் அவரும் வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
கொரோனாவில் இருந்து குணமான அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் இன்னும் சில நாட்களில் தனது வழக்கமான பணிகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது