1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Minister Jayakumar opens up about Rajini Kamal alliance

ரஜினி - கமல் என்ன வேணா செய்யட்டும்: ஜெயகுமார்!

கமல்
கமல் மற்றும் ரஜினி கூட்டணி குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேட்டியளித்துள்ளார்.
 
அவர் கூறியதாவது, கமல்ஹாசனுடன் கூட்டணி அமைப்பது கட்சியின் விருப்பம். கமல், ரஜினியுடன் இணைவது அவரது தனிப்பட்ட கருத்து. கமல் விஸ்வரூபம் படத்தை தடை செய்த போது எம்.ஜி.ஆர் பற்றி பேசாதது ஏன். எம்.ஜி.ஆர். வாக்குகளை வாங்க நினைத்தால் கானல் நீராகத்தான் போவார்கள். 
 
இரட்டை இலைக்கு வாக்களித்த கைகள் வேறு எந்த கட்சிக்கும் வாக்களிக்க மாட்டார்கள். கட்சிகள் எப்படி எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடலாம். கட்சிகள் சொந்தம் கொண்டாடுவது சந்தர்ப்பவாதத்தின் உச்சம். கமல் மூன்றாவது, நான்காவது அணி கூட ஆரம்பிக்கலாம். ஆனால் முதல் அணியாக அதிமுகதான் இருக்கும் என கூறினார். 
About Writer
Sugapriya Prakash