புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 டிசம்பர் 2020 (15:49 IST)

’’தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ‘’...நடிகர் ரஜினிக்கு விரைவில் சம்மன்!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகரும் புதிய கட்சி தொடங்கவுள்ள அரசியல்வாதியுமான ரஜினிகாந்துக்கும் விரைவில் சம்மன் அனுப்பப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகரும் புதிய கட்சி தொடங்கவுள்ள அரசியல்வாதியுமான ரஜினிகாந்துக்கும் விரைவில் சம்மன் அனுப்பப்படவுள்ளதாக ஒருநபர் விசாரணை ஆணையத்தில் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடிகர் ரஜினிகாந்த் விசாரணைக்கு ஆஜராகலாம் என தகவல் வெளியாகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டேர்லை ஆலைக்கு எதிரான போராட்டத்தில் திடீரென்று ஏற்பட்ட வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம் என்று நடிகர் ரஜினி கூறியது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 அடுத்த மாதம் ரஜினியின் புதிய கட்சி உதயமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.