1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 17 டிசம்பர் 2020 (13:46 IST)

கமல் விரும்பினால் அதிமுகவில் சேரலாம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தேர்தல் வரும் நேரத்தில் அனைத்து அரசியல்வாதிகளும் எம்ஜிஆரை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டு பிரச்சாரம் செய்வது வழக்கமாக உள்ளது. அதிமுக மட்டுமே எம்ஜிஆரை தங்களது பிரச்சாரத்திற்கு ஒரு காலத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்த நிலையில் தற்போது பல கட்சிகள் எம்ஜிஆரை வைத்து அரசியல் செய்து வருகிறது 
 
அந்த வகையில் கமல்ஹாசனும் சமீபத்தில் பிரச்சாரம் செய்தபோது நான் எம்ஜிஆர் மடியில் வளர்ந்தவன் என்று கூறினார் எம்ஜிஆரின் ஆட்சியைத்தான் கொண்டு வருவேன் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே ரஜினிகாந்தும் எம்ஜிஆர் ஆட்சியை தருவேன் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தி கமல் பிரசாரம் செய்து வருவதற்கு அதிமுகவினர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் கூறியபோது ’கமல் விரும்பினால் அதிமுகவில் சேர்ந்து எம்ஜிஆரை உரிமை கொண்டாடலாம் என்றும் அதிமுகவை தள்ளிவைத்துவிட்டு எம்ஜிஆர் உரிமை கொண்டாடும் கமலின் வசனங்கள் மக்களிடம் எடுபடாது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்