செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified புதன், 11 ஜனவரி 2023 (12:33 IST)

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி! என்ன ஆச்சு?

Duraimurugan
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தியால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
திமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்
 
84 வயதான துரைமுருகன் அவர்களுக்கு காய்ச்சல் என்றும் அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்
 
கடந்த மாதம் காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran