சோனியா காந்தி உடல்நிலை: மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியான நிலையில் தற்போது அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சுவாசப்பாதை தோற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதிலிருந்து அவர் படிப்படியாக குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்தி தனது தாயாரை பார்ப்பதற்காக டெல்லி திரும்பினார் என்பதும் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரியங்கா காந்தி அவருடைய தாயாருடன் மருத்துவமனையில் தங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Edited by Mahendran