ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 10 ஜனவரி 2023 (14:39 IST)

பள்ளி சத்துணவில் பாம்பு... 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

west bengal
மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் பாம்பு இருந்த காரணத்தால் 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, பிர்மூம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்கள் மதிய உணவை சாப்பிடும் போது, அந்த உணவில்  பாம்பு கிடந்துள்ளது.

இந்த உணவைச் சாப்பிட்ட 30 மாணவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தொடக்க பள்ளி ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக பள்ளியில் விசாரணை நடத்தப்படும் என மயூரேஸ்வர் வட்டார வளர்ச்சி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் பருப்பு நிரப்படும் கொள்கலனின் பாம்பு ஒன்று இருந்ததாக உணவு தயாரித்த பள்ளி ஊழியர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.